மும்பை: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்து வர்த்தமாகி வருகிறது. நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்த்தில் அமெரிக்கா அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரம் விநியோக ஒப்பங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க அதானி முனைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்கர்களிடம் இருந்து அதானி அதிகளவில் முதலீடுகளை திரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்த்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்து வருகிறது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்து விற்பனையாகிறது. அதேபோல அதானி போர்ட் பங்கு விளையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 13 சதவீதம் சரிவு; அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதம் சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 17 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் சரிந்து வரத்தமாகி வருகிறது.