அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 250 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய வேகத்தில் பேச்சு நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு ஒரு மாதத்தில் கைவிடப்படும்.
அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மின்உற்பத்தி திட்டங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.