வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும், கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது , “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

Resolution introduced in US Congress to designate January as Tamil Language  and Heritage Month - The Economic Times

இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஒரு அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில், அமெரிக்காவிலும், உலகெங்கிலும் தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துகள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கம். மேலும் இந்த தீர்மானம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் தமிழர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம், நம்ப முடியாத சாதனைகள் மீது ஔி வீசும் என மனதார நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *