வாஷிங்டன்: அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் டிரம்ப் பேசிக் கொண்டு இருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. இதில் டிரம்ப் காதில் காயம் ஏற்பட்ட போதும் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
அதேநேரம் டிரம்ப் உயிர் தப்ப மேடையில் இருந்த அந்த ஒரு விஷயம் தான் காரணமாக இருந்துள்ளது. டிரம்பே உயிர் பிழைக்க இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் பிரச்சாரம் நடக்கும் நிலையில், அதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இதற்காக டிரம்ப் அமெரிக்கா முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது தான் நேற்று எதிர்பாராத விதமாகத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
திரும்பிய அந்த நொடி: டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பேசிக் கொண்டு இருந்த போது அவர் பெரும்பாலும் மக்களை நோக்கி நேராகவே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மேடையில் ஒரு சார்டை காட்டி வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நொடி அந்த சார்ட்டை நோக்கி அவர் திரும்பவே அப்போது தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சரியான நேரத்தில் அவர் தனது வலது பக்கம் திரும்பி அந்த சார்ட்டை பார்த்தது.. இதுவே அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. முதலாம் குண்டிற்கு பிறகே அடுத்த இரண்டாவது நொடி மேடையில் இருந்த சீக்ரெட் சர்வீஸ் அவரை சூழ்ந்து கொண்டு கீழே தள்ளினர்.
இதன் காரணமாகவே மற்ற புல்லட்கள் எதுவும் நல்வாய்ப்பாக டிரம்ப் மீது படவில்லை. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சீக்ரெட் சர்வீஸ் சுட்டுக் கொன்ற நிலையில், இரண்டாவது நிமிடம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.
இதற்கிடையே சரியான நேரத்தில் தலையைத் திருப்பியதே டிரம்ப் உயிரைக் காப்பாற்றி உள்ளது. சட்ட விரோத குடியேற்றம் குறித்த அந்த சார்ட் தனது உயிரைக் காப்பாற்றி இருப்பதாக டிரம்ப் நம்புகிறார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்குப் பிறகு டிரம்ப் அவரது கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜாக்சன் என்பவரிடம் பேசியுள்ளார்.
சட்ட விரோத குடியேற்றம் குறித்த அந்த சார்ட் தன்னை காப்பாற்றியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வேலை வலது பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் அந்த குண்டு தனது தலையில் பாய்ந்து இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.