பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதில், 60 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 26ம் தேதி முறைப்படி பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது. உடனடியாக சிந்து நதியில் அனுமதிக்கப்படும் தண்ணீர் அளவை இந்தியா குறைத்தது.

Amid Pahalgam tension, India cuts Chenab water flow through Baglihar dam:  Report | Latest News India - Hindustan Times

இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது.

இந்நிலையில் பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. ஜம்மு அருகே ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியில் உள்ள பக்லிஹார் அணை நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணை நீர் வெளியேற்றமும் நிறுத்தப்பட்டது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இங்கு, அணையின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டன. இரு அணைகளின் நீர் வெளியேற்ற நேரத்தை ஒழுங்குபடுத்தும் அனுமதி ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கிஷங்கங்கா அணையில் இருந்து ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *