புதுடெல்லி: விநாயகர் பூஜைக்காக பிரதமர் மோடி, எனது இல்லத்திற்கு வந்ததில் எந்த தவறும் இல்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். டெல்லியில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில்,’ கணபதி பூஜைக்காக பிரதமர் எனது இல்லத்திற்குச் வந்தார். சமூக மட்டத்தில் கூட நீதித்துறை மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான சந்திப்புகள் அடிக்கடி தொடர்வதால், பிரதமர் மோடி எனது வீட்டிற்கு வந்ததில் எந்த தவறும் இல்லை. நாங்கள் ஜனாதிபதி மாளிகை, குடியரசு தினம் போன்றவற்றில் சந்திப்போம். நாங்கள் பிரதமருடனும், அமைச்சர்களுடனும் அடிக்கடி உரையாடி வருகிறோம்.

Absolutely nothing wrong': CJI DY Chandrachud on PM Modi's visit to his  residence for Ganpati Puja - BusinessToday

இந்த உரையாடலில் நாங்கள் முடிவு செய்யும் வழக்குகள் தொடர்பாக ஒருபோதும் இருந்தது இல்லை. ஆனால் பொதுவாக வாழ்க்கை மற்றும் சமூகம் தொடர்பாக இருக்கும். ஒரு வலுவான இரு அமைப்புகளின் ஒரு பகுதியாக ஒரு உரையாடல் நடந்தது என்பதை மதிக்க வேண்டும். நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பது என்பது இருவரும் சந்திக்கவே கூடாது என்று அர்த்தமல்ல. அயோத்தி ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்விற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தது என்பது நான் மத நம்பிக்கை கொண்டவன் என்ற அர்த்தத்தை மட்டுமே அளிக்கும். நான் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *