அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதில்,
4200 ஆண்டுக்கு முன் தமிழர் இரும்பை பயன்படுத்தினர்
தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதற்கான சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021- 22 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நுண் இரும்பு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நுண்கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்ககாலம் வரை பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளது. மயிலாடும்பாறை கரிம மாதிரிகள், (கி.மு.2172) எனக் காலக் -கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரும்பு வாள், கத்தி, அம்புமுனை, ஈட்டிமுனை, கோடாரி ஆகிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி கண்டெடுப்பு
3155 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெல் உமி, அரிசி சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சிவகளையில் 82 அகழாய்வுக் குழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிவகளை அகழாய்வில் 581 தொல்பொருட்களும் 160 முதுமக்கள் தாழிகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2685 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.