மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற பகுதியில் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் இயங்கி வருகிறது. இங்குள்ள எரிவாயு எடுத்து செல்லும் குழாய் ஒன்றில் நேற்று காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 500 மீ நீளமுள்ள குழாயில் ஏற்பட்ட தீ 200 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெப்பக்காற்று வீசியதுடன், கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் 49க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 112 பேர்உடல் கருகி பலியாகினர்.