சென்னை: லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Police Books TN BJP Chief K Annamalai, Here's Why - Oneindia News

சர்வதேச அரசியல் படிப்பிற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். 3 மாதங்களில் இப்படிப்பை முடித்து, நவம்பர் இறுதியில் இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா தலைமையில் ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், சக்கரவர்த்தி, எம்.முருகானந்தம், கனகசபாபதி ஆகிய 6 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரது பணிகளை கவனிக்க பாஜகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுக்கும். மாநில தலைவர், ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலில் குழுவின் உறுப்பினர்கள் செயல்படவுள்ளனர். 6 பேர் கொண்ட பாஜக மையக்குழுவுடன் ஆலோசித்து, கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு முடிவெடுக்கும்.

Periyar: Row after Tamil Nadu BJP leader H Raja says Periyar is next - The  Economic Times

கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *