சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வால்டாக்ஸ் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் 79 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 1,383 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி, 29 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

வடசென்னை இனி வளர்ந்த சென்னை.." நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்!  | Chief Minister Stalin is proud that North Chennai is a developed Chennai  - Tamil Oneindia

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் ரூ.129.50 கோடி மதிப்பீட்டில் 700 புதிய குடியிருப்புகள் கட்டுதல், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் ரூ.143.56 கோடி மதிப்பீட்டில் 776 புதிய குடியிருப்புகள் கட்டுதல், கொன்னூர், திருவொற்றியூர், பெரம்பூர் சென்ட்ரல் நிழற்சாலை, கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் – சந்திரயோகி சமாதி சாலை, புழல்-விளாங்காடுபாக்கம் ஆகிய இடங்களில் ரூ.57 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுதல், ரூ.21 கோடி மதிப்பீட்டில் தண்டையார்பேட்டையில் விளையாட்டு அரங்கம், வில்லிவாக்கம்-அகத்தியர் நகர் மற்றும் ராயபுரம் – மூலகொத்தளத்தில் விளையாட்டு திடல்கள் அமைத்தல், கொளத்தூர் – ஜவஹர் நகர் மற்றும் பெரியார் நகர் நூலகங்களை ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், கொளத்தூரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் சேவை மையம் கட்டுதல், கொளத்தூர் – நேர்மை நகரில் 36.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுதல் என ரூ.421 கோடி மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகள்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாதவரம் பேருந்து முனையம் மற்றும் விநாயகபுரம் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், எண்ணூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பேசின் பாலம், பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களிலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல், மாத்தூர், கொடுங்கையூர், ராயபுரம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை – சோலையப்பன் தெரு, பெரியதம்பி தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் – காத்பாடா பிரதான சாலை மற்றும் சண்முகம் தெரு, செனாய் நகர் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள், வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள், வில்லிவாக்கத்தில் மறுவாழ்வு மையம் அமைத்தல், கொடுங்கையூரில் சமுதாயக்கூடம், சேத்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவை மேம்படுத்துதல்,

கத்திவாக்கம் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், காசிமேடு, கொளத்தூர், பல்லவன் சாலை ஆகிய இடங்களில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள், குளங்களை சீரமைக்கும் பணிகள், மண்டலம் 1 முதல் 8 வரையில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி அழகுபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ள பார்வை மறைப்பான்கள், பெரம்பூரில் இறைச்சிக்கூடம் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையை மேம்படுத்துதல் என ரூ.204 கோடி மதிப்பீட்டிலான 45 புதிய திட்டப்பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் குடிநீர் குழாய்களை சீரமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் என 440 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 திட்டப் பணிகள்,

விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம் -  தமிழ்நாடு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கிட டேவிட்சன் தெருவில் 33/11 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைத்தல் மற்றும் 310 ஆர்.எம்.யு மின் உபகரணங்கள் நிறுவுதல், என 70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 திட்டப்பணிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகத்தில் 269 புதிய குடியிருப்புகள் கட்டுதல், புளியந்தோப்பில் 612 புதிய குடியிருப்புகள் கட்டுதல் மற்றும் எல்லீஸ்புரத்தில் 65 புதிய குடியிருப்புகள் கட்டுதல், என 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.1,268 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *