தேனி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு உள்ளது என டிடிவி.தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் நேற்று நடந்த அமமுக ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘23ம் புலிகேசி மன்னராக இருந்தது போல தான் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கிறார். இவரையும் ஒரு புலிகேசியாக தான் பார்க்கிறேன்.

அதிமுகவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் டிடிவி தினகரன் கூறுகிறார்- TTV  Dhinakaran says a With or without in ADMK

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறு உருவம் கிடையாது. சில பேர் சுயலாபத்திற்காக அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஓ.பி.எஸ் முதலமைச்சரானதற்கு பின்பு ஜெயலலிதா நினைவிடத்தில் போய் மொட்டை போட்டு சசிகலா தான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும், பொதுச் செயலாளராக வேண்டும் என்று டிராமா பண்ணியது யார்? அரசியலில் ஒரு பெரிய காமெடி நடிகர் உதயகுமார். அதிமுக ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தான் நல்லது.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். பழனிசாமி என்ற சுயநல மனிதர் எல்லோரும் ஒன்றிணைவதற்கு தடையாக இருக்கிறார்’ என்றார். தொடர்ந்து, ‘எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், “அரசியலில் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உண்டு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடியின் இதே நிலை தொடர்ந்தால் அதன் பிறகு அதிமுக இழுத்து பூட்டப்படும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *