வாஷிங்டன் : வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தொடர்பான தரவுகளை விளம்பர பயன்பாட்டிற்காக தனது பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்த மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது.

What is WhatsApp? How to use the app, tips, tricks, and more | Digital  Trends

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் கீழ் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் சொந்த விவரங்களை விளம்பர பயன்பாட்டிற்காக இன்ஸ்டா உள்ளிட்ட தனது பிற நிறுவனங்களுக்கு மெட்டா பகிர்ந்தது என்பது குற்றச்சாட்டு.

அத்துடன் 2021ம் ஆண்டு வாட்ஸ் அப்-பிற்கான தனி உரிமை கொள்கையை மெட்டா புதுப்பித்த போது, அதில் தரவு பகிர்தலை அனுமதிக்குமாறு பயனர்களை மெட்டா கட்டாயப்படுத்தியதாகவும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தனது மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடியை இந்திய போட்டி ஆணையம் அபராதமாக விதித்துள்ளது.

Competition Commission Dismisses Abuse Of Dominance Complaint Against  Indian Rare Earths India Limited

அத்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாட்ஸ் அப் பயனர்களின் தரவுகளை சொந்த நிறுவனங்களுக்குள் பகிர போட்டி ஆணையம் தடை விதித்துள்ளது. இதுவரை பகிரப்பட்ட தரவுகள் என்னென்ன? எந்தெந்த நிறுவனங்களுக்கு பகிரப்பட்டன? எப்படி பயன்படுத்தப்பட்டன? என்பது போன்ற தகவல்களை அளிக்கவும் மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தரவுகளை பகிர்தலில் பயனர்களின் அனுமதியை பெறும் வசதியை வைக்கவும் ஆணையிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *