பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய  அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு,

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு | commercial gas cyliner price  reduction
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *