சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்படுத்தப்பட்டார். அவரது புகாரின் பேரில் ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
23 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து வீடியோவாக எடுத்த அந்த நபர், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் டீனிடம் சொல்லி டிசி வாங்கிக் கொடுத்து விடுவதாக மிரட்டிய அந்த நபர், வீடியோவை மாணவியின் தந்தைக்கும் அனுப்புவதாக தெரிவித்தாராம். இந்த நிலையில் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதான கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் அந்த ஞானசேகரன், மாணவியை மிரட்டும் போது யாரோ ஒருவரிடம் போனில் பேசியதாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்தாராம். அந்த மாணவி யாரோ ஒரு சாருடன் இரவு தங்க வேண்டும் என்றும் அந்த நபர் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அது போல் கோவையில் தனது வீட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டமும் நடந்தன. மேலும் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழகம் முழுவதும் யார் அந்த சார் என கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அது போல் தவெக கட்சித் தலைவர் விஜய்யும் தனது பங்கிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விஜய் தம் கைப்பட எழுதிய கடிதத்தை விநியோகித்தனர்.
இந்த நிலையில் பாமகவின் மகளிர் அணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அடுத்தது நானா, Am I Next என கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போராட்டம் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடக்கிறது. அதிமுகவுக்கு எதிராக திமுக போஸ்டர் ” இந்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.