குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவு தாண்டி அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வாரை கடந்த ஜூலை மாதம் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிகாலை 1.40 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது நடவடிக்கையை எதிர்த்து சுரேந்தர் பன்வார் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பன்வார் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ED Raid: पश्चिम बंगाल में ईडी की ताबड़तोड़ छापेमारी, तमिलनाडु में 100 करोड़ से अधिक की साइबर धोखाधड़ी मामले में कार्रवाई

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவை தாண்டி அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமலாக்கத்துறையின் இந்த செயல் மனிதாபிமானமற்றது, அராஜகமானது என்றும் அவர்கள் கூறினர்.
Powers and functions of the Supreme Court - iPleaders
குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை வலுக்கட்டாயமாக வாக்குமூலம் அளிக்க வைக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுரங்க முறைகேடு விவகாரத்தில் பன்வாக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் இல்லை எனக்கூறி அவர் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தனர். அத்துடன் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் மனிதாபிமானத்துடனும் முறையாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *