உத்தரபிரதேசம்: மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார்.
கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சார்பில் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. கமிஷன் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா தலைமையிலான அமர்வு கருது தெரிவித்துள்ளது.