சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.
ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.