சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,557 பள்ளிகளை சேர்ந்த 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள் எழுத உள்ளனர்.
4,755 தனித்தேர்வர்கள், 137 சிறைவாசிகள் என 8,23,261 மாணாக்கர்கள் எழுத உள்ளனர். 3,316 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை கண்காணிக்க 44,236 கண்காணிப்பாளர்களும், 4,470 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது