குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி நிர்மலா சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோவை பாஜவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக லண்டனில் இருக்கும் தமிழக பாஜ மாநில் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், வணிக உரிமையாளருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை பகிர்ந்து கொண்ட எங்கள் செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தனிப்பட்ட சந்திப்பை பாஜவினர் வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.