Category: உலக அரசியல்

மியான்மரில் நிலநடுக்கம் – நிலநடுக்கத்தில் 1000யை கடந்த பலி..!

மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி…

“இறக்குமதி கார்களுக்கு 25 சதவீதம் வரி” – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு !

வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அமெரிக்கா பக்கம் இழுக்க உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இந்த நிலையில்,…

“தென்கொரியாவில் மோசமான காட்டுத்தீ” – 24 பேர் பலி !

சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ மோசமாக பரவி வருகின்றது. தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு…

“வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்கா: வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கா 2வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக…

கனடா நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: ஏப்ரல் 28ம் தேதி வாக்குப்பதிவு!

டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில் கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கனடா நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும்…

மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் !

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில், உக்ரைன் மற்றும் ரஷ்யா வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கொள்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளன. எனினும் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. நேற்று முன்தினம் இரவு உக்ரைனின் சபோரிஜியா நகரத்தின் மீது ரஷ்யா தாக்குதல்…

“டெஸ்லா நிறுவனத்தை சேதப்படுத்தினால் 20 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்”- அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் சேதப்படுத்தப்படும் சம்பவம் பெரிய அளவில் பற்றி எறியும் நிலையில் 20 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் , பொரிகன், லவ் லேண்ட் என நாடு முழுவதும்…

டிரம்ப் பேச்சுவார்த்தை – உக்ரைன் , ரஷ்யா போர் நிறுத்தம் ?

டிரம்ப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறுகியகால போர் நிறுத்தத்துக்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒப்பு கொண்டுள்ளன. ஆனால் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க…

“ஜான் எஃப் கென்னடி படுகொலை” – 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியீடு !

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இன்று வெளியாகி உள்ளது. 1963 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி டல்லாஸ்…

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் – நாசா கொடுத்த தகவல் !

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது. சூழ்நிலை காரணமாக விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கினார். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த…