புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் விவாதத்தின்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

Insult of Babasaheb': BJP replaces Ambedkar's image with George Soros's,  draws flak from Congress | India News - The Indian Express

இதன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் அமித் ஷா தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும், அரசியலை விட்டு விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்தன. நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் பாஜ எம்பிக்கள் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜ எம்பிக்கள் காயமடைந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று மக்களவை தொடங்கியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் அம்பேத்கரை புகழ்ந்தும், அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் எந்த வாயில் அல்லது வளாகத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கேள்வி நேரத்துக்கு பதிலாக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா 2024, யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகியவற்றை நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். கூச்சல், குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *