கொழும்பு : இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க ஆற்றிய உரையில், ” இலங்கை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது தடுக்கப்படும். இதனால் இலங்கையின் கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் | தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகிறோம், “இவ்வாறு தெரிவித்தார்.