வாஷிங்டன்: தொழிலதிபர் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோருகிறது. அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவில் மின்ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி 265 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதானி, உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.