தமிழக பாஜ சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை எழும்பூரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பாஜக- அதிமுக கூட்டணி உறுதியானது: அமித்ஷாவை மட்டுமல்ல ஜேபி நட்டாவையும் சந்தித்த எடப்பாடி டீம்! | ADMK-BJP Alliance Confirmed in Delhi - Meeting with Amit Shah and JP Nadda ...

நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, தமாகா மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா, துணைத் தலைவர் விடியல் சேகர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா, நோன்பு திறப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி, செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து முடிச்சு போட்டு சொல்லப்போவதில்லை. அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். இதில் அரசியல் கணக்கு எதுவுமில்லை’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *