அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
81 வயதாகும் ஜோ பைடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சமீபகாலமாக பொது மேடைகளில் பைடன் நடந்து கொள்ளும் விதம் விமார்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதனால் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்திக்கின்றனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ள பைடன் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒருவேளை தனது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதிபருக்கான அதிகாரங்களை கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்க தயார் என்றும் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்யும் மாறு ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியதாக வாஷிங்டன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.