மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பாஜவுக்கு கணக்கை தொடங்கி வைத்ததால் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடந்த பிலிம் சேம்பர் கூட்டத்தில் சுரேஷ் கோபி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியமாகும். 22 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.
குறிப்பாக அமித்ஷா குறித்தும் அவர் பேசியது மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தபடி பணம் பெறும் வேறு தொழிலில் ஈடுபடக்கூடாது. எனவே சினிமாவில் நடிக்கும் முடிவில் சுரேஷ் கோபி உறுதியாக இருந்தால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ மேடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.