ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த ஜெர்மனி, நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன், ஸ்பெயின் அணிகளும், பி பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெளியேற்ற, நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது. ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்தது. பி பிரிவில் இருந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற 3 அணிகள் தோற்று வெளியேறிய நிலையில், இந்தியா மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

India vs Australia Hockey Highlights, Paris Olympics 2024: India Beat Australia For The 1st Time In 52 Years | Olympics News

கிரேட் பிரிட்டனுக்கு எதிரான காலிறுதி 1-1 என டிரா ஆனதால், பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், பைனலுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இன்று இரவு 2வது அரையிறுதியில் ஜெர்மனி – இந்தியா மோதுகின்றன. மேட்ஸ் கிராம்போஷ் தலைமையிலான ஜெர்மனி அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த வலுவான அணியாக இருக்கிறது. அந்த அணியின் ரூர் கிறிஸ்டோபர், ஜூஸ்டஸ் விகண்ட், நிக்லஸ் வெல்லென், கோன்சலோ பெய்ல்லட் ஆகியோருடன் கேப்டன் மேட்சும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கோல்கீப்பர் ஜீன் பால் டன்பெர்க் எதிரணியை கோலடிக்க விடாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியும் துடிப்புடன் விளையாடி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. லீக் சுற்றில் சாம்பியன் பெல்ஜியத்திடம் மட்டும் தோல்வியை சந்தித்த இந்தியா, அதன் பிறகு தொடர்ந்து அதிரடி காட்டி வெற்றிகளை குவித்து வருகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலடித்து அணியை கரை சேர்க்கிறார் கேப்டன் ஹர்மன்பிரீத். அபிஷேக், விவேக் பிரசாத், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங் என அணியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி ஒத்துழைக்கின்றனர். கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அணியை காக்கும் அரணாக இருந்து வருகிறார். பிரிட்டனுக்கு எதிரான காலிறுதியில் அவர் காட்டிய உறுதி இந்தியாவை பதக்கத்தை நெருங்க வைத்துள்ளது. பைனலுக்கு முன்னேறுவதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்யும் முனைப்புடன் இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Olympics 2024 Hockey Quarter-Final: Who Will India Face & When is The Last 8 Match in Paris? - myKhel

* இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளதில் இந்தியா 8-6 என முன்னிலை வகிக்கிறது (4 டிரா).

* கடைசியாக மோதிய 6 ஆட்டங்களில் இந்தியா 5ல் வென்றுள்ளது.

* இந்த ஆண்டு புரோ லீக் தொடரில் மோதிய ஒரு ஆட்டத்தில் மட்டும் ஜெர்மனி 3-2 என நூலிழையில் வென்றது.

* ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் (மேற்கு) ஜெர்மனி 1972ல் முதல் முறையாக பதக்கம், அதுவும் தங்கப் பதக்கத்தை வென்றது. ஜெர்மனி மொத்தம் 4 தங்கம், தலா 2 வெள்ளி, வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளது.

* இந்தியா இதுவரை 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை அள்ளியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *