இங்கிலாந்து : 27 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெயினருடன் கடலில் மூழ்கிய 50 லட்சம் லெகோ பொம்மைகள் தற்போது வரை கரை ஒதுங்கி வருவது இங்கிலாந்து மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

27 Years After The Great Lego Spill, Toy Pieces Still Washing Up On Beaches

கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்த பொருட்கள் கிடைத்தால் எப்படி இருக்கும். இது தான் இங்கிலாந்து கடற்கரைகளில் நடந்து வருகிறது. அந்நாட்டின் கான்வெல் என்ற நகரம் அழகான கடற்கரைகளுக்கு பெயர் போனது இந்த கடற்கரைக்கு வருவோர் இயற்கை அழகை ரசிப்பது, கடலில் குளிப்பது மட்டுமின்றி அங்கு கரை ஒதுங்கி கிடக்கும் லெகோ பொம்மைகளை தேடுவதையும் முக்கியமான பொழுது போக்காக வைத்துள்ளனர்.

20 Years After the Great Lego Spill, They're Still Washing Ashore

1997ம் ஆண்டு நெதர்லாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு டோக்கியோ எக்ஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் சென்றது. இங்கிலாந்தின் புகழ் பெற்ற லான்சென் கடற்கரைக்கு அருகே கடுமையான அலையில் சிக்கி இந்த கப்பலில் இருந்த 62 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. அதில் ஒரு கன்டெய்னரில் 50 லட்சம் லெகோ பொம்மைகள் இருந்துள்ளன. அவை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வரை கரை ஒதுங்கி வருகின்றன. பல துண்டுகளை ஒன்றோடு ஒன்று பொருத்தி வடிவங்களை உருவாக்கும் விளையாட்டு பொருள் லோகோ கடலில் மூழ்கி கரை ஒதுங்கும் லோகோ பொம்மைகள் அனைத்துமே கடல் சார்ந்தது என்பது ஆச்சர்யத்தை அதிகரித்துள்ளது.
Beachcomber finds 'holy grail' Lego octopus washed ashore from spill 26 years ago | The Independent

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரேட்ஸை வில்லியம்ஸ் என்பவர் இந்த லோகோ பொம்மைகள் குறித்து தனியாக முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வைத்துள்ளார். இங்கிலாந்து கடற்கரையில் மட்டுமே கிடைத்து வந்த இந்த பொம்மைகள் தற்போது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து கடற்கரைகளிலும் கரை ஒதுங்கி வருகின்றன.

Dragons and Sharks on a Beach Near You: The Story of the Great Lego Spill - The New York Times

கடற்கரையில் எதிர்ச்சியாக கிடைக்கும் பொம்மைகளை எடுப்பது உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் இது மிக பெரிய சுற்று சூழல் பாதிப்பு என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் பிளாஷ்டிக்க்கால் செய்யப்பட்ட லெகோ பொம்மைகள் நிறம் மாறாமல் எந்த சேதமும் இன்றி கிடைக்கின்றன. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பூமியை எந்த அளவு மடக்கி வருகின்றன என்பதற்கு அடையாளமாக இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *