டெல்லி: இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்திருந்தால் 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியிருக்கும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்திருந்தால் 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியிருக்கும். இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் மாயாவதி எங்கள் கூட்டணியில் இணையவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர்ந்திருந்தால் பா.ஜ.க. உ.பியில் தோற்றிருக்கும் என்று கூறினார்.