கொழும்பு: கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ரூ.237கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நளின்டா ஜெயதிசா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை-இந்தியா இடையே சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முன்மொழிவுற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் கல்வித்துறைக்காக ரூ.31கோடி, சுகாதார துறைக்கு ரூ.78 கோடி, விவசாயத்தக்கு ரூ.62 கோடியை இந்தியா வழங்கும். இந்த திட்டங்கள், உள்கட்டமைப்பு, வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளன” என்றார்.