உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார்.

Putin approves changes to Russia's nuclear doctrine

ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ரவரி மாதம் போர் தொடங்​கியது. இந்த போர் தொடங்கி நேற்​றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ளது. ரஷ்யா​வின் தாக்​குதலால் உக்ரைனில் ஆயிரக்​கணக்​கானோர் உயிரிழந்​துள்ளனர். நாட்​டின் அடிப்படை உள்கட்​டமைப்பு தகர்ந்​துள்ளது.

இதனிடையே, ரஷ்யா மீது தாக்​குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்​லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்​தது. எனினும், இந்த ஏவுகணை​களைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன.

தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய உள்ளது. இந்நிலை​யில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கி​யுள்​ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்​படுத்​தும்​பட்​சத்​தில் ரஷ்யா​வுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்த சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த ரஷ்யா முடிவு செய்​துள்ளது.

இதற்​கேற்ப தன் அணு ஆயுதக் கொள்​கை​யில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்​படி, அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்​ரைன்), அணு ஆயுதம் வைத்​திருக்​கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்​குதல் மேற்​கொண்​டால், பதிலுக்கு அந்நாட்​டின் மீது ரஷ்யா​வும் அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்​தும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Russia-Ukraine War - The New York Times

குறிப்​பாக, பாலிஸ்​டிக் ஏவுகணை உட்பட நவீன ஏவுகணை​கள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்​வழித் தாக்​குதல் மேற்​கொள்​ளப்​படும்​பட்​சத்​தில், பதிலுக்கு அணு ஆயுதங்​களைப் பயன்​படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்​துள்ளது. இது தொடர்பான ஆவணங்​களில் ரஷ்ய அதிபர் புதின் நேற்று கையெழுத்​திட்​டுள்​ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *