சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது. அதே மாதம் 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.56,000 தொட்டது.

Gold price spikes, now costs ₹6,870/gram in Chennai

அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,280க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.58,240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இதையடுத்து நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Kolkata: Gold, silver prices today, March 13 - Check rates in Delhi,  Mumbai, Chennai, Kolkata and other cities | Personal Finance News, Times Now

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *