டெல்லி: தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25-க்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தார்.

Budget 2024 Key Highlights: From capital gains, income tax changes to  employment initiatives, here are the key takeaways | Mint

மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆற்றிய உரையில்,

தங்கம், வெள்ளி, வைரத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு

* தங்கம், வெள்ளிகளுக்கான சுங்கவரி 6% ஆகவும், வைரத்திற்கு 8.4%ஆகவும் குறைக்கப்படும்.

* தங்கம், வெள்ளி பொருட்களுக்கு 15% ஆக உள்ள இறக்குமதி வரி 6%ஆக குறைக்கப்படுகிறது.

* தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 6% ஆகவும், பிளாட்டினத்திற்கு 6.4%ஆகவும் குறைப்பு.

தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைப்பு

*தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என அறிவிப்பு.

*செல்போன் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்கவரி 15%ஆக குறைப்பு

*இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு

* பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.

*சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு.

* ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் வரை மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த முயற்சி: நிர்மலா சீத்தாராமன்

* நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இணைய வர்த்தகத்திற்கான TDS குறைப்பு

*இணைய வர்த்தகத்திற்கான TDS வரி குறைக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

TDS தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமல்ல

*TDS தாக்கல் செய்யப்படுவதற்கான தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது

அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி முறை

*அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்படும்.

*இரண்டு முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும்.

வெளிநாடு காப்பரேட் கம்பெனிகளுக்கு வரி குறைப்பு

*வெளிநாடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40% லிருந்து 34% ஆக வரி குறைப்பு.

*முதலீடுகளை பெருக்கவும் வளர்ச்சிகளை மேற்கொள்ளவும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு.

வருமான வரி-நிலையான கழிவு ரூ.75,000ஆக அதிகரிப்பு

*வருமான வரிக்கான நிலையான கழிவு ரூ.15,000லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பில் மாற்றமில்லை

தனிநபருக்கான வருமான வரி செலுத்துவதற்கான வரம்பில் LIVE எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏஞ்சல் டாக்ஸ் முறை முழுமையாக அகற்றம்

*ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலுமாக அகற்றப்படும் என அறிவிப்பு.

ஏஞ்சல் வரி என்றால் என்ன?

ஸ்டார்ட் அப் நிறுவனம் அதன் சந்தை மதிப்பை விட அதிக முதலீடுகளை பெற்றால் ஏஞ்சல் வரி விதிக்கப்படும். முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி கோரும் நிறுவனங்கள் எஞ்சல் வரி செலுத்த வேண்டும் என்பது நடைமுறை. தற்போது முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி விதிப்பு முறை முழுமையாக அகற்றப்படுகிறது.

Budget 2024 Highlights: Budget boost for jobs, small businesses but LTCG,  STT on F&O spook stocks

வருமான வரி விதிப்பு நடைமுறையில் மாற்றம்

* புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை.

*ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வருமானம் பெறுவோருக்கு 5% வருமான வரி விதிக்கப்படும்.

* ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு ரூ.10% வரி விதிக்கப்படும்.

*ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் ரூ.15% வரி செலுத்த வேண்டும்

* ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுதோறும் வருமானம் பெறுவோருக்கு 20% வரி விதிப்பு.

*ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுவோருக்கு
30% வரி விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *