குஜராத்தில் கனமழை விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். இதேபோல் மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் கனமழையால் 10 பேர் பலியாகி விட்டனர். வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுகுறித்து குஜராத் அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரிகள் கூறும்போது, இந்த காலகட்டங்களில் மின்னல், இடி, சுவர் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “கனமழையால் 7 மாவட்டங்களில் உள்ள 29 லட்சம் ஹெக்டர் நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மரத்வாடா பகுதியில் கனமழைக்கு 10 பேர் பலியாகி விட்டனர் ” என்று தெரிவித்தனர்.