திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Wayanad Landslide Live Updates: At least 40 killed, hundreds feared trapped  amid landslides near Meppadi; rescue ops underway | India News - The Indian  Express

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிருடன் புதைந்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் பலர் மாயமாகியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இதானல் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் இயக்கப்படும் சுமார் 17 ரயில் சேவைகளை முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல ரயில் சேவைகளின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் அகமலா பகுதியில் தண்டவாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Wayanad landslides: Once picturesque villages now lie in ruin,  chooralmala,mundakayam,meppadi,wayanad,landlside,kerala landslide,kerala  rains,wayanad landslide, cm
ஷோரனூர் – திருச்சூர் இடையே அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம்-கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சூரிலும், திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் அலுவாவிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் எண். 16305 எர்ணாகுளம் – கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சூரில் பகுதியளவில் நிறுத்தப்படும் என்றும் ரயில் எண். 16791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவாவில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண். 16302 திருவனந்தபுரம் – ஷோரனூர் வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண். 06445 குருவாயூர் – திருச்சூர் டெய்லி எக்ஸ்பிரஸ், ரயில் எண். 06446 திருச்சூர் – குருவாயூர் டெய்லி எக்ஸ்பிரஸ், ரயில் எண். 06497 ஷோரனூர் – திருச்சூர் டெய்லி எக்ஸ்பிரஸ், ரயில் எண். 06495 திருச்சூர் – ஷோரனூர் டெய்லி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 12081 கண்ணூர் – திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஷோரனூர் சந்திப்பில் பகுதியளவில் நிறுத்தப்படும்.

Several trains running late due to heavy rain, Ernakulam passenger  cancelled - KERALA - GENERAL | Kerala Kaumudi Online

ரயில் எண் 16308 கண்ணூர் – ஆலப்புழா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் எண் 16649 மங்களூரு சென்ட்ரல் – கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சில ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
காலை 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம் நிஜாமுதீன் மங்களா எக்ஸ்பிரஸ் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி பயணிகள் தங்களின் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *