டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றம் செய்தது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. கடந்தாண்டு நவம்பர் 29ம் தேதி இணைப்புக்குழு அளித்த பரிந்துரைகளுக்கு டிச.26ல் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியது. சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றம் செய்தது.

அதிரடி முடிவு! சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மீடியம்.. 22 இந்திய மொழிகளில்  பயிற்றுவிக்க CBSE அனுமதி! | CBSE allows indian languages as medium of  instruction in CBSE Schools - Tamil ...

அதன்படி மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கலாம். விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கும்; 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதப்படும். பின்னர், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு இணைப்பு வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *