ஈரோடு: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி பெற்ற நேரத்தைவிட கூடுதலாக பிரச்சார கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் அளித்துள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறியதாக ஏற்கெனவே சீமான் மீது கடந்த 25ம் தேதி 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

 

சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு, 3 more cases registered  against seeman in Chennai

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அதைபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *