சென்னை: கலைஞரின் 6வது நினைவு தினத்தையொட்டி வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என சென்னை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 6வது நினைவு நாளையொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர்கள், துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவின் முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7ம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞரின் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்து அங்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

Kalaignar' M Karunanidhi passes away, leaves void in politics, media, cinema

இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் – இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் கலைஞரின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த வருமாறு சென்னை மேற்கு, தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *