சென்னை: சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான கட்டணத்தை பல மடங்காக விமான நிறுவனங்கள் உயர்த்தின. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காததால் விமானங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Chennai airport reports spurt in passenger and freight movement | Chennai  airport reports spurt in passenger and freight movement

இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதேபோல், திருவனந்தபுரம். கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,925-ஆகவும் திருச்சியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,109-ஆகவும் அதிகரித்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.10,179-ஆகவும் சேலத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.9,516 ஆக அதிகரித்துள்ளது.

Chennai Airport Domestic Terminal|Outside and Inside View|Metro  Train,Car,Flight|Travelogue 1080p - YouTube

பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.பேருந்து, ரயில்களில் அதே பயண கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விமான கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *