சென்னை : சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்காக செய்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது.இறந்த பின்னரே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் மருத்துவமனைகளில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும்.

Chennai enthralled by the IAF Air Show at Marina after a gap of 21 years -  The Hindu

சாசக நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் 2 முறை ஆலோசனை நடந்தது. விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தேவையான அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக இந்திய விமானப்படையே நேற்று தெரிவித்திருந்தது. விமான சாகச நிகழ்ச்சியின்போது போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. வெயில் காரணமாக குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. விமானப்படை கேட்டது 100 வசதிகளுடன் கூடிய வார்டு,;ஆனால் அரசு தரப்பில் 4,000 படுக்கை வசதிகள் தயாராக இருந்தன.

. தமிழக அரசின் விரிவான ஏற்பாடுகளை இந்திய விமானப்படை அதிகாரிகளே பாராட்டிருந்தனர். மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்கு 65 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

Heatstroke claims five lives at IAF air show at Marina Beach in Chennai -  The Economic Times

அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெயில் உள்ளிட்ட காரணங்களால் 102 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 93 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுவிட்டனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *