சேலம், அரக்கோணம் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 20.01.2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, செயல்பாட்டு காரணங்களுக்காக பின்வரும் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது:

Extension of Erode-Nellai rail service to Red Fort | ஈரோடு-நெல்லை ரெயில்  சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு

அரக்கோணத்தில் இருந்து 05:15 மணிக்கு புறப்பட்டு சேலம் ஜங்ஷனில் 10:50 மணிக்கு வந்தடையும், ரெயில் எண் 16087 அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷனில் இருந்து 15:30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்தில் 20:45 மணிக்கு வந்தடையும், ரெயில் எண் 16088 சேலம் – அரக்கோணம் மெமு ரெயில் வாரத்தில் 5 நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *