வஷிங்டன்: அதிபர் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் போட்டியிட்ட நிலையில் பின்னர் போட்டியில் இருந்த விலகினார். இதனை தொடர்ந்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதேபோல் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் நேற்று பேட்டி அளித்தார். எக்ஸ் தளத்தில் ஆடியோ வடிவில் நேரலையாக இந்த பேட்டி ஒளிபரப்பானது. இதை பல லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த பேட்டியில் பைடன் மற்றும் கமலா ஹாரிசை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசினார். டிரம்ப் கூறுகையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டது ஒரு சதியாகும். துணை அதிபராக கமலா ஹாரிஸ் மூன்றரை ஆண்டுகள் இருந்தார். மேலும் அவர்கள் ஏதாவது செய்ய விரும்பினால் இன்னும் 5 மாதங்கள் உள்ளது.
ஆனால் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். எல்லாம் பேச்சு மட்டும் தான். கமலா ஹாரீஸ் திறமையற்றவர். பைடனும் திறமையற்றவர்.பைடனை காட்டிலும் கமலா மிகவும் திறமையற்றவர் என்றார்.