தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு மக்கள் கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.