சென்னை: தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய கலாச்சார மையத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிய இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருப்பது கட்டாயமா? தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடியின் வாரணாசிக்கு அடுத்து மதுரையில் சாதித்த சு.வெங்கடேசன்! ஒரே இடத்தில்  17000 மாற்றுத்திறனாளிகள் | Madurai Marxist MP Su Venkatesan hold record for  conduction ...

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்திய கலாச்சார தொடர்புகளுக்கான கழகம் (Indian Council for Cultural Relations) செப்டம்பர் 13 2024 அன்று வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிக்கை அப்பட்டமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதாக உள்ளது.

அது வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகங்களில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஆன தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிற அறிவிக்கை ஆகும்.

அதில் “விரும்பத்தக்க தகுதிகளாக” இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி சார்ந்த அறிவு குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இந்திய கலாச்சார தொடர்பு கழகம் “விரும்புகிறது” என்று தெரியவில்லை. இது அப்பட்டமான இந்தி சமஸ்கிருத திணிப்பே அன்றி வேறொன்றும் இல்லை.

இந்தியாவின் அலுவல் மொழி விதிகளில் இருந்தே விதி விலக்கைப் பெற்றுள்ள தனித்துவம் தமிழ்நாட்டிற்கு உண்டு. அது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தின் வெளிப்பாடு. மேற்கண்ட அறிவிக்கை அலுவல் மொழி விதிகளின் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் விரோதமானதாகும். தமிழ்நாட்டின் விண்ணப்பதாரர்கள் பெரும்பான்மையினருக்கு இந்தி/ சமஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத போது தெரிந்த அதை “விரும்பத்தக்க” தகுதியாக குறிப்பிடுவது அவர்களின் தேர்வு பெறும் வாய்ப்புகளை சீர் குலைப்பது ஆகும்.

Specialty of Tamil language | தமிழ்மொழியின் சிறப்பு

ஆகவே இப் பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக அந்த அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *