வெள்ள பாதிப்பை பார்வையிட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய குழுவை உடனே அனுப்பி வைக்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “பேரிடர் பாதிப்பை மாநில அரசு திறம்பட எதிர்கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் கூறினேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin writes to PM Modi on 'Centre's aggressive attempt to impose  Hindi' | Today News

மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.

Tamil Nadu: Another landslide hits Tiruvannamalai, hours after seven people  were trapped amid heavy rainfall | Today News

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *