மக்களவையில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பழங்குடி விவகாரத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கி பதிலளிக்கையில்,2021-22ல் தொடக்க பள்ளிகளில் பழங்குடி மாணவர் சேர்க்கை 103.4 சதவீதமாகும். இது 2023-24ல் 97.1 சதவீதமாக குறைந்துள்ளது.
அனைத்து சமூகத்தை சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2021-22ல் 100.13 சதவீதமாக இருந்தது. அது தற்போது 91.7 சதவீதமாக குறைந்துள்ளது. 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை 2021-22ல் 78.1 சதவீதமாக இருந்தது. தற்போது 76.9 சதவீதமாக குறைந்துள்ளது.
அனைத்து சமூக மாணவர்களின் எண்ணிக்கை 2021-22ல் 79.56 சதவீதத்தில் இருந்து 77.4 சதவீதமாக குறைந்து விட்டது. மேல்நிலை வகுப்பு பிரிவில் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை 52 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதே பிரிவில் அனைத்து சமூக மாணவர்களின் எண்ணிக்கை 57.56 சதவீதத்தில் இருந்து 56.2 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்தார்.