கர்நாடகா: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் நடந்த சுதந்திர தின விழா அம்மாநில முதல்வர் கொடியேற்றினார்.
பின்னர் உரையாற்றிய அவர்; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. அரசியலமைப்பு கோட்பாடுகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.
மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். சமூகநலத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தும்போது தேவையான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஒன்றிய அரசிடம் இருந்து தங்களுக்கு வர வேண்டிய நிதிக்காக மாநிலங்கள் நீதிமன்றங்களை நாடும் நிலை உள்ளது. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும் என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மாநிலங்கள் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு நியாயமான நிதியை ஒதுக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது. நாட்டின் ஜனநாயகம் யாருடைய கைகளிலும் இருக்கும் பொம்மை அல்ல என்று கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்று கூறினார்.