டெல்லி: வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது.

Tamil Nadu NEET Bill: Assembly readopts at special session, BJP stages walkout

இந்நிலையில் தான் நீட் தேர்வு ரத்து செய்யாதது ஏன்? என்பது பற்றி உச்சநீதிமன்றம் இன்று விரிவான விளக்கம் அளித்ததோடு, தேர்வு தொடர்பான நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்து கூடாது என தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது கடந்த மே மாதம் 5ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடந்த இந்த தேர்வை 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது.

அதன்பிறகு ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் வெளியான நிலையில் தான் நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் வெடித்தன. அதாவது நீட் தேர்வுக்கு முன்பாகவே பீகாரில் வினாத்தாள் கசிந்தது, மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என தொடர்ந்து முறைகேடு புகார்கள் வர தொடங்கின. இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்யவில்லை.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணையிலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது. வினாத்தாள் கசிந்ததை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டது. அதேவேளையில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டுமே வினாத்தாள் கசிந்தது. பிற இடங்களில் வினாத்தாள் கசியவில்லை. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என தேசிய தேர்வு முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Supreme Court Of India: A Journey From Inception To Present Structure

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது நீட் முறைகேடுகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கும் போதுமான தரவுகளும் இல்லை. நீட் தேர்வையே ரத்து செய்து மறுதேர்வு நடத்தினால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீட் முறைகேடுகள் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது உறுதியானால் பின்னர் நடவடிக்கை எடுக்கலாம். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

மேலும் மாநிலங்கள், தேர்வு மையங்கள் வாரியாக ரிசல்ட் வெளியிட உத்தரவிட்டது. “இந்தியாவிலேயே முதலிடம்”அதுமட்டுமின்றி நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடாதது ஏன்? என்பது பற்றி வரும் நாளில் விரிவாக தெரிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி இளநிலை நீட் தேர்வு 2024 ரத்து செய்ய மறுத்தது ஏன்? என்பது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் விரிவான விளக்கத்துடன் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், ‛நீட் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். வினாத்தாள் கசிவை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில் மாறுபட்ட கருத்துகள் கூடாது. உறுதியாக இருக்க வேண்டும். மாறுபட்ட நிலைப்பாடு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

நீட் தேர்வு விவகாரத்தில் பல குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம். இது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பலன் அளிக்கம். நீடர் தொடர்பான 7 பேர் கொண்ட நிபுணர் குழு குறைபாடுகளை களைவதற்கான அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செயல்முறையை முழுவதுமாக ஆராய்ந்து அதனை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்க வேண்டும். இந்த குழு செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை வழங்க வேண்டும். அதன்பிறகு இந்த குழுவின் பரிந்துரை மீதான முடிவுகளை கல்வி அமைச்சகம் 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும்.

Why exams like JEE, NEET are not good enough to test students' aptitude - Hindustan Times

மேலும் வினாத்தாள் கசியாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வினாத்தாள் பீகாரின் பாட்னா மற்றும் ஜார்கண்ட்டின் ஹசாரிபாக்கில் மட்டுமே நடந்துள்ளது. நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசியவில்லை. இதனால் நீட் தேர்வு என்பது ரத்து செய்யப்படவில்லை. அதேவேளையில் வினாத்தாள் கசியாமல் தடுக்கவும், வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதையும் உறுதி செய்ய லாஜிஸ்டிக் ப்ரோவைடர் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *