விழுப்புரம்: நேற்று நடந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உறுப்பினர் என்பதை தவிர பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் முகுந்தன் விலகினார் .
அன்புமணி பகிரங்க எதிர்ப்பு தெரிவித்ததால் பேரன் முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி எதிர்ப்பை மீறி கட்சிப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று முகுந்தன் தனது தாத்தா ராமதாஸிடம் நேற்றிரவு கூறியுள்ளார். பா.ம.க.வில் தற்போது வகிக்கும் ஊடகப் பிரிவு பொறுப்பில் இருந்தும் விலகி தொண்டராக மட்டும் தொடர முகுந்தன் விருப்பம். முகுந்தன் விருப்பத்தை தாத்தா ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாக அன்புமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதல் ஏற்பட்டது. புதுச்சேரியில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.