புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே ரயில்வே பவன் அமைந்துள்ளது. இதனருகே உள்ள பூங்கா நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடலில் தீப்பற்றி எரிந்ததும் அவர் அலறியபடி நாடாளுமன்ற பிரதான நுழைவுவாயிலை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Man Sets Himself On Fire, Then Runs Towards Parliament; Suffers 95% Burns

இதுகுறித்து அங்கிருந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையின்படி, “தீக்குளிக்க முயன்றவர் உத்தரபிரதேசம் பாக்பத்தில் வசிக்கும் ஜிதேந்திரா. இவர் பாக்பத்தில் உள்ள சிலருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *